உந்துருளி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!
குருநாகல் – ஹெரலியாவல, அலகொலதெனிய உப வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) மாலை இடம்பெற்ற விபத்தில் உந்துருளி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளது.
குறித்த உந்துருளி நீர்கொழும்பு – குருநாகல் பிரதான வீதியை நோக்கி பயணித்த போது, வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கால்வாய்க்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த நபர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.