உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பள்ளத்தில் பாய்ந்த பாரவூர்தி; சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
25 பார்வைகள்

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் கடந்த (25) லிந்துலை சமூர்த்தி வங்கிக்கருகில் 100 அடி பள்ளத்தில் பாரவூர்தி ஒன்று விழுந்து விபத்திற்குள்ளாகியது.

இதில் பாரவூர்தியின் சாரதி ஹெரோயின் போதைப்பொருள் பாவனை செய்து வாகனத்தை செலுத்தியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் லிந்துலை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பில் பாரவூர்தி சாரதியிடம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மேற்கொண்ட வைத்திய பரிசோதனையில் சாரதி ஹெரோயின் போதைப்பொருள் பாவனை செய்து வாகனத்தை செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தொடர்ந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சாரதி சிகிச்சை முடிந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டு நுவரெலியா நீதிவான் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என லிந்துலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெல்லவாயாவிலிருந்து ஹட்டன் எபோட்ஸ்லி தோட்டத்திற்கு விறகு ஏற்றிச்சென்ற ஒரு பாரவூர்தி பிரதான வீதியிலிருந்து விலகி சுமார் 100 அடி ஆழமுள்ள தேயிலைத் தோட்டத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் பாரவூர்தி இரண்டாக உடைந்து கடுமையாக சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

11 0 0
இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

77 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0