உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அரசின் அனுபவமின்மையால் நாசமாகும் மக்களின் பணம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
26 பார்வைகள்

“திறைசேரியில் உள்ள மக்களின் வரிப்பணத்தைப் பாதுகாக்க முடியாத அளவுக்குத் தற்போதைய அரசு நிர்வாகத் திறமையற்று இருக்கின்றது. பல மாதங்களாக இந்த நிதி மோசடியை நாடாளுமன்றத்துக்குத் தெரிவிக்காமல் மறைத்து வைத்திருப்பது ஒரு பாரிய சதியாகும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.

இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“இந்த அரசுக்கு நாட்டை வழிநடத்தும் அனுபவம் இல்லை என்பதை நாம் ஏற்கனவே எச்சரித்தோம். ஆனால், வெறுப்புணர்வைப் பரப்பி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த இவர்கள், இப்போது மக்களின் வரிப்பணத்தை நாசமாக்கியுள்ளனர்.

இந்தத் திறைசேரிப் பணம் என்பது பெலவத்தையிலிருந்து (ஜே.வி.பி தலைமையகம்) கொண்டுவரப்பட்டதோ அல்லது அவர்களின் உறுப்பினர்களிடம் வசூலிக்கப்பட்டதோ அல்ல. இது இந்த நாட்டு மக்களின் இரத்தம் கலந்த வரிப்பணம். இதற்கு யார் பொறுப்பேற்பது?

நாடாளுமன்றம் என்பது நாட்டின் நிதி தொடர்பான முழுமையான பொறுப்புள்ள நிறுவனமாகும். ஆனால், பல மாதங்களாக இந்த மோசடித் தகவலை அரசு இரகசியமாக வைத்திருந்தது ஏன்?

நாடாளுமன்றத்துக்கோ அல்லது நிதி தொடர்பான குழுவுக்கோ இது தெரியப்படுத்தப்படவில்லை. ஜனாதிபதிக்கும் இது தெரிந்தே மறைக்கப்பட்டதா?” – என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இழந்த பணத்தை மீண்டும் மீட்போம் என்று அரசு கூறுவது மற்றொரு பொய் என்று சாடிய அவர், “உகாண்டாவில் உள்ள பணத்தை மீட்டு வருவோம் என்று சொன்னவர்களால் இதையும் செய்ய முடியாது. இறுதியில், நிலக்கரி மோசடியைப் போலவே இந்த இழப்பையும் ஈடுகட்ட மின்சாரக் கட்டணம் அல்லது எரிபொருள் விலையை உயர்த்தி மக்கள் மீதே வரிச்சுமையைச் சுமத்துவார்கள்” என்றும் தெரிவித்தார்.

அரசு தவறு செய்யும்போது அதைச் சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியின் கடமையாகும். அதைத் தடையாகப் பார்க்காமல், உண்மையை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் ஹர்ஷண ராஜகருணா வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

11 0 0
இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

77 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0