உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இல்லாத அரசமைப்பைப் பற்றி பேசுவதை விட யதார்த்தமான நகர்வே முக்கியம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
28 பார்வைகள்

“உத்தரவாதம் இல்லாத புதிய அரசமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய தீர்வு பற்றிப் பேசும் நாம், ஏற்கனவே அரசமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோருவதில் என்ன தவறு இருக்கின்றது?” என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்துமாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் தரப்பினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்த குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. அவ்வாறான சூழலில், எதிர்காலத்தில் வரக்கூடிய ஒன்றுக்காகத் தீர்வுத் திட்டத்தைத் தயாரிக்கும் அதேவேளை, ஏற்கனவே சட்டத்திலுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோருவது அவசியமானதாகும்.

தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் கூட்டு முயற்சியில் கஜேந்திரகுமார் ஆரம்பத்தில் இணங்கினார். இப்போது அவர்கள் பிறிதொரு குழுவாகத் தனித்துச் செயற்படுவதாக இருந்தால், அந்தப் பேரவையின் கூட்டு முயற்சியில் இணைந்திருப்பதா, இல்லையா என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும்.

கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பிலும் இது குறித்துப் பேசப்பட்டது. அரசமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தம் குறித்துப் பேசக்கூடாது என்று எவருக்கும் சொல்ல முடியாது எனச் சட்டத்தரணிகள் உள்ளிட்ட சகலரும் அங்கு சுட்டிக்காட்டினர்.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்த ஆவணங்களைத் தயாரிப்பது கடினமானதல்ல. ஏற்கனவே பல ஆவணங்கள் இருக்கின்றன. இல்லாத ஒன்றைப் பற்றிப் பேசிக் கொண்டு இருப்பதை விட யதார்த்தமான நகர்வுகள் முக்கியம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

11 0 0
இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

77 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0