உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

போதைப்பொருள் கடத்தல்; 22 பிக்குகளுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
20 பார்வைகள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 110 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளையும் எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் பதிவான மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிக்குகள், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போதே நீதிவான் இந்த விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தார்.

கைப்பற்றப்பட்ட 110 கிலோகிராம் எடையுள்ள ‘குஷ்’ மற்றும் ‘ஹசீஸ்’ ரக போதைப்பொருட்களின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்களைக் கண்டறியப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, இவர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான நிதியை வழங்கியவர்கள் யார்? இந்தப் பாரிய கடத்தல் பின்னணியில் இயங்கும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு எது? இந்தச் சதித்திட்டத்தில் வேறு நபர்களுக்கும் தொடர்பு உள்ளதா? ஆகிய கோணங்களில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இளம் பிக்குகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட இந்தப் பாரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளமை தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்துப் பொலிஸார் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

77 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0