உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அரசின் மோசடிகளை மூடிமறைக்க விடவேண்டாம்; சகாக்களுக்கு ரணில் அறிவுறுத்தல்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
31 பார்வைகள்

சத்திர சிகிச்சையின் பின்னர் நாடு திரும்பி மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்துத் தனது நெருக்கமான அரசியல் சகாக்களுடன் முக்கிய ஆலோசனைகளை முன்னெடுத்துள்ளார்.

இந்த வாரம் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடல்களில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது பதவியில் இருந்து விலகியமைக்கான உண்மைப் பின்னணியை அரசு நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க இதன்போது வலியுறுத்தினார். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிடுமாறு பேராசிரியர் ஜி.எல். பீரிஸுக்கு அவர் பணிப்புரை விடுத்தார்.

தற்போதைய அரசுக்குச் சரியான திசையைக் காட்ட எத்தனை பேர் ஆலோசனை வழங்குகின்றார்கள் என ரணில் இதன்போது கேள்வி எழுப்பினார்.

இது குறித்து அவர் மேலும் சுட்டிக்காட்டியதாவது,
“ஒருபுறம் எரான் விக்கிரமரத்னவை உள்வாங்க முயற்சிகள் நடக்கின்றன, மறுபுறம் ஹர்ஷ டி சில்வாவிடம் ஆலோசனைகள் பெறப்படுகின்றன.

எரான் விக்கிரமரத்னவை இவ்வாறான பதவிகளுக்குக் கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளேயே கடும் எதிர்ப்பு நிலவுகின்றது.

இந்த திரைமறைவுப் பேச்சுகளுக்குப் பின்னால் யார் இருக்கின்றார்கள் என்பது மர்மமாகவே உள்ளது.” – என்றார்.

அரசுக்கு எதிராக எழுந்துள்ள மோசடிக் குற்றச்சாட்டுகளை மூடிமறைக்கப் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று சாடிய அவர், வாக்களித்த மக்களை முட்டாள்களாக்க அரசு முற்படுகின்றது என்றும் தெரிவித்தார். எனவே, உண்மை நிலையை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் என்றும், இதற்கு எதிராகக் கூட்டு எதிர்க்கட்சி வலுவாகச் செயற்பட வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க இதன்போது அறிவுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0