உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஆட்சியில் இருப்பது கொள்ளையர்களின் அரசாங்கம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
20 பார்வைகள்

இன்று ஆட்சியில் இருப்பது கொள்ளையர்களின் அரசாங்கம் என்று மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் பட்டப்பகலில் திறைசேரியை கொள்ளையடித்துள்ளது. பிக்பொக்கட் (பணப்பையை) அடிப்பவர் திருடன் என்று கூறிக்கொண்டு சுற்றித் திரிகின்றான். அந்த திருடர்கள் சொல்வதைக் கேட்டு அப்பாவி மக்கள் அவனைத் துரத்திச் செல்கின்றனர்.

அந்த திருடன் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்துவிடுகிறான். அரசாங்கமும் அப்படித்தான். அரசு பதவியேற்ற நாள் முதல், ஒருபுறம் முந்நூற்று இருபத்து மூன்று கொள்கலன்கள் கள்ளத்தனமாகக் கடத்தப்பட்டுள்ளன.

துறைமுகத்திலிருந்து போதைப்பொருள் கொள்கலன்கள் கடத்தப்பட்டுள்ளன. மறுபுறம், நிலக்கரி மோசடி செய்யப்படுகின்றது. இப்போது நிதி அமைச்சின் கணக்கிலிருந்தும் பணம் திருடப்பட்டுள்ளதென்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0