உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு; மீண்டும் வெளிப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்களின் இடிபாடுகள்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
20 பார்வைகள்

மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்ததால், மாஸ்கெலியா பழைய நகரத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களின் இடிபாடுகள் மீண்டும் வெளிப்பட்டுள்ளன.

தேசிய நீர்மின்சக்தி அமைப்புக்குச் சொந்தமான மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், நீர்த்தேக்கத்தில் நீரில் மூழ்கியிருந்த மஸ்கெலியா பழைய நகரத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களின் இடிபாடுகள் மீண்டும் நீரிலிருந்து வெளியே தென்படுகிறது.

தேசிய நீர்மின் சக்தி அமைப்புக்குச் சொந்தமான மஸ்கெலிய மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம், இன்று காலை 06.00 மணி நிலவரப்படி, அதன் வழிந்தோடும் மட்டத்திலிருந்து 34 அடி குறைவாக இருந்தது என திட்டப் பொறுப்பு பொறியாளர்கள் தெரிவித்தனர்.

மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்து வருவதால், நீர்த்தேக்கத்திற்குள் மூழ்கியிருந்த பழைய மஸ்கெலியா நகரின் மதத் தலங்களில் ஒன்றான பௌத்தக் கோயிலின் சமாதி சிலை, ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலயம், கங்குவத்தை நகரில் இருந்த விநாயகர் கோயில், இஸ்லாமிய மசூதி மற்றும் கத்தோலிக்க தேவாலயத்தின் இடிபாடுகள் ஆகியவை தற்போது நீரிலிருந்து வெளிப்பட்டுக் காணப்படுகின்றன.

மத்திய மலைப்பகுதிகளில் உள்ள நீர்மின் நிலையங்களின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை இல்லாததால், தேசிய நீர்மின்சக்தி அமைப்பைச் சேர்ந்த காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும், இன்றைய காலை 06.00 மணி நிலவரப்படி, அதன் நிரம்பி வழியும் மட்டத்திலிருந்து 40 அடியாகக் குறைந்துள்ளதாகவும் லக்சபான நீர் மின் நிலைய நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 6 அடி உயர வேண்டும். கென்யோன் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 4 அடி உயர வேண்டும். விமல சுரேந்திர நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 2 அடி உயர வேண்டியுள்ளது. மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 5 அடி நிரம்ப வேண்டும் என நீர்த்தேக்கங்களின் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை வேளையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலையக பகுதியில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களுக்கும் நீரை வழங்கும் சகல ஓடைகள், ஆறுகள். நீர்வீழ்ச்சிகளில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0