உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

திறைசேரி மோசடி ‘ஹேக்கிங்’ அல்ல; மின்னஞ்சல் ஊடாக நடந்த ஆள்மாறாட்டம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடியானது, கணினி கட்டமைப்புக்குள் ஊடுருவி நடத்தப்பட்ட நேரடி ‘ஹேக்கிங்’ அல்ல என்றும், இது மிகவும் நுணுக்கமான முறையில் மின்னஞ்சல் ஊடாக முன்னெடுக்கப்பட்ட ஆள்மாறாட்ட மோசடி என்றும் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த மோசடி குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“சர்வதேச நிறுவனம் ஒன்றின் பெயரைப் போன்று தோற்றமளிக்கும் வகையில் போலியான இணையதள முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை மோசடியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

அந்த நிறுவனத்தின் உண்மையான அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி, திறைசேரி அதிகாரிகளைத் தவறாக வழிநடத்தி பணப்பரிமாற்றத்துக்கான அனுமதியைப் பெற்றுள்ளனர். இதன் ஊடாகவே அரச நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த மோசடி தொடர்பில் பல முனைகளில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு, இலங்கை மத்திய வங்கி மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் இணைந்து இந்த நிதி எங்கே கொண்டு செல்லப்பட்டது என்பதையும், இதற்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதையும் கண்டறியப் பணியாற்றி வருகின்றன.

பணப்பரிமாற்றம் வங்கிக் கணக்குகள் ஊடாகவே நடைபெற்றுள்ளதால், அந்தப் பணத் தடயங்களை வைத்து இழந்த நிதியை மீண்டும் மீட்க முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.” – என்று பிரதி அமைச்சர் வீரரத்ன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0