உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து விபத்து ; இருவர் படுகாயம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
20 பார்வைகள்

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் இன்று 25 ஆம் திகதி லிந்துலை சமூர்த்தி வங்கிக்கு அருகில் 100 அடி பள்ளத்தில் லொறியொன்று வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது இதில் லொறியின் சாரதியும் உதவியாளரும் படுகாயமடைந்துள்ளனர்.


விபத்தில் காயமடைந்தவர்கள் லிந்துலை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வெல்லவாயாவிலிருந்து ஹட்டன் எபோட்ஸ்லி தோட்டத்திற்கு விறகு ஏற்றிச் சென்ற ஒரு லொறி பிரதான வீதியில் இருந்து விலகி சுமார் 100 அடி ஆழமுள்ள தேயிலைத் தோட்டத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

75 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

82 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0