இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பதிவான மாற்றம்.!
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்ததின்படி, 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு 840,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.ஜனவரி 1 முதல் ஏப்ரல் 22 வரை இடம்பெற்ற காலப்பகுதியில் மொத்தமாக 840,411 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 176,465 ஆக பதிவாகியுள்ளது.அதனைத் தொடர்ந்து பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதேநேரம் ஏப்ரல் மாதம் 1 முதல் 22 வரை மட்டும் 99,777 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் முந்தைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் நாளாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் குறைவு காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை தரவுகள் குறிப்பிடுகின்றன.