உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நாட்டின் பல பகுதிகளில் வெப்பக் குறியீடு எச்சரிக்கை மட்டத்தை எட்டும் அபாயம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
33 பார்வைகள்

நாட்டின் பல மாவட்டங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு இன்று (26) எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதன் காரணமாக வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்கள் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மதிய நேரத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் மனித உடல் உணரும் வெப்பக் குறியீடு ஆபத்தான அளவிற்கு அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட நேரம் நேரடி சூரிய ஒளியில் இருப்பது மற்றும் வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுவது உடல் சோர்வை ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்தவும், தேவையற்ற வெளிப்புற செயல்பாடுகளை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், கடினமான உடற்பயிற்சிகள் அல்லது உடல் உழைப்பில் தொடர்ந்து ஈடுபடுபவர்களுக்கு தசைப்பிடிப்பு (Heat Cramps) ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


அத்துடன், வீட்டுக்குள் தங்கியிருக்கும் முதியவர்கள் மற்றும் நீண்டகால நோயாளிகள் குறித்து குடும்பத்தினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

75 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

82 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0