உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ரணிலின் மனைவியிடம் சி.ஐ.டி. விசாரணை:ஐக்கிய தேசியக் கட்சியினர் கடும் கண்டனம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
36 பார்வைகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்குக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் திடீர் வருகை தந்து, அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன வெளியிட்டுள்ள அறிக்கையில், இதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல்நலக் குறைவில் இருந்து மீண்டு வரும் முன்னாள் ஜனாதிபதியை பராமரித்து வரும் நிலையில், மனைவியுமான பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவும் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், சி.ஐ.டி. அதிகாரிகள் திடீரென இல்லத்துக்கு வருகை தந்தமை கவலைக்கிடமானது எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவோ என்ற சந்தேகத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த விசாரணைக்கு யாருடைய அறிவுறுத்தலின் பேரில் அதிகாரிகள் அனுப்பப்பட்டனர் என்பது தொடர்பிலும் ஐ.தே.க. கேள்வி எழுப்பியுள்ளது.


இதேவேளை, இலண்டனில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி மேற்கொண்ட பயண செலவுகளுக்கு அரச நிதி முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

53 0 0