உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு நேரக் கட்டுப்பாடு: பொலிஸ் விசேட அறிவிப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
31 பார்வைகள்

பொது வைபவங்கள் மற்றும் நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாடுகள் தொடர்பில், பொலிஸ் தலைமையகம் பொதுமக்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு விசேட நினைவூட்டலை விடுத்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள சட்டவிதிகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில், ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு பின்வரும் நேர எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.


திங்கள் முதல் வியாழன் வரை காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இந்த அனுமதி அதிகாலை 1.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12.30 மணி வரை ஒலிபெருக்கி பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்த நேரக் கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஒழுங்காகவும் சட்டத்திட்டங்களை மதித்தும் நிகழ்வுகளை நடத்த வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்த விதிமுறைகளை மீறும் நபர்கள் அல்லது அமைப்புகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

53 0 0