அருச்சுனா எம்.பி உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு பிணை.!
தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு வைத்தியர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு தகவல்கள் பரப்பியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் மற்றும் வைத்தியர் ஜெயக்குமார் ஆகியோருக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் யாழ்ப்பாண நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தமது சட்டத்தரணி ஊடாக மன்றில் முன்னிலையாகினர். இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், குறித்த இருவரையும் சொந்த பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், வழக்கின் மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் மே மாதம் 29ஆம் திகதிக்கு மன்றம் நாள்தேதி நிர்ணயித்துள்ளது.