உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: பூஜித ஜயசுந்தர கோரிக்கை நிராகரிப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
30 பார்வைகள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்குத் தவறியமை மற்றும் குற்றவியல் ரீதியான கவனயீனம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், அவரது கோரிக்கையொன்றைக் கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை நீதியரசர் பிரியந்த லியனகே தலைமையிலான மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பூஜித ஜயசுந்தர விடுத்த கோரிக்கை தொடர்பிலான கட்டளையை வழங்கிய நீதிபதிகள் குழாம், அதனை நிராகரிப்பதாக அறிவித்தது.

பூஜித ஜயசுந்தர சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரொஷான் தெஹிவல நீதிமன்றில், “எனது கட்சிக்காரர் (பூஜித ஜயசுந்தர) ஏற்கனவே வழங்கிய கூண்டுப் பிரகடனத்தில் இரண்டு முக்கிய விடயங்களைத் தற்செயலாகத் தவறவிட்டுள்ளார். எனவே, அந்த விடயங்களை மீண்டும் புதிய உண்மைகளாகச் சேர்ப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும்.” – என்று கோரினார்.

முன்கூட்டியே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும், ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் கடமையைச் செய்யத் தவறியமைக்காகப் பூஜித ஜயசுந்தரவுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும், ஏற்கனவே வழங்கப்பட்ட கூண்டுப் பிரகடனத்தில் திருத்தங்களை மேற்கொள்ள நீதிமன்றம் இதன்போது இடமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

53 0 0