உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான சாட்சியங்களின் பதிவுகள் முன்னெடுப்பு..!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
34 பார்வைகள்

மன்னார் மாவட்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில்,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை 24 ஆம் திகதி மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலக பிரதிநிதிகள்,சட்டத்தரணிகள் கலந்து கொண்டதோடு,மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களை தேடும் நூற்றுக்கணக்கான உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் இதுவரை காணாமல் போனவர்கள் தொடர்பாக 612 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அவற்றில் 427 விண்ணப்பங்களுக்கான பூர்வாங்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாகவும், அவற்றுக்கான இடைக்கால நிவாரணம்,காணாமல் போனதற்கான சான்றிதழ்,மரண சான்றிதழ் என்பவற்றை வழங்கியுள்ளதாக காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலக பிரதி ஒருவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

53 0 0