உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மாளிகைக்காடு மையவாடிக்கு ‘நிரந்தர கல்வேலி’ அமைக்கும் பணி பர்ஹான் தலைமையில் ஆரம்பித்து வைப்பு..!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
31 பார்வைகள்

மாளிகைக்காடு மையவாடி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் அண்மைக் காலமாக தீவிரமடைந்துவரும் கடலரிப்பு அபாயத்தை தடுக்கும் பொருட்டு, கடலரிப்பைத் தடுப்பதற்கான ‘கல்வேலி’ (Revetment) பாதுகாப்புச் செயற்றிட்டம் 23 ஆம் திகதி நேற்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.பர்ஹான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சமூக வலுவூட்டல் மற்றும் கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் அரசியலமைப்புப் பேரவை உறுப்பினரும், அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோர் கலந்து கொண்டு இப்பணியை ஆரம்பித்து வைத்தனர்.

கடலரிப்பால் பாதிக்கப்பட்டுவரும் மாளிகைக்காடு மையவாடியின் கடலரிப்பைத் தடுப்பதற்காக நிரந்தர ‘கல்வேலி’ அமைக்கும் இவ்வேலைத்திட்டத்திற்காக சுமார் 20 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோரின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டு அவர்களது துரித தலையீட்டின் பயனாகவே இக்கல்வேலி அமைக்கும் திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

53 0 0