உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தடம் புரண்ட சாகரிக்கா கடுகதி தொடருந்து கடலோர மார்க்கத்தில் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
36 பார்வைகள்

கடலோர தொடருந்து போக்குவரத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைக்கு மாற்றாக இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா கடுகதி தொடருந்து இன்று காலை (24.04.2026) தடம் புரண்டதால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடலோர தொடருந்து பாதையின் எதிர்கால போக்குவரத்து நடவடிக்கைகள் தொடர்பாக இன்று (24.04.2026) அரசு தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஞ்சீவ கனகரத்ன இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இன்று மாலை 04.45 மணிக்கு புறக்கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து மாலை 06.15 மணிக்கும் பெலியத்தை, மாத்தறை மற்றும் காலிக்கு 03 பேருந்துகளும், மாலை 05.00 மணிக்கு அம்பலங்கொட மற்றும் ஹிக்கடுவாவிலிருந்து இரண்டு பேருந்துகளும் புறப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


சம்பந்தப்பட்ட பேருந்துகளில் பயணிக்க தொடருந்து பருவக்கால பயணச்சீட்டு அல்லது தொடருந்து பயணச்சீட்டு தேவைப்படும் என்றும், சம்பந்தப்பட்ட பயணிகளிடமிருந்து வேறு எந்தக் கட்டணமும் அறவிடப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாதுவையில் சாகரிக்கா கடுகதி தொடருந்து தடம் புரண்டபோதிலும், அலுவலக தொடருந்து சேவைகளை இரத்து செய்யாமல் இயக்க தொடருந்து திணைக்களம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, பாதிக்கப்பட்ட பகுதிக்கு தொடருந்து சென்று, பயணிகளை உரிய இடத்தில் இறக்கிவிட்டு, பின்னர் அவர்களை மற்றொரு தொடருந்து மூலம் அவர்களின் சேருமிடத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

53 0 0