உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

2.5 மில்லியன் டொலர் ஹேக்கர்களுக்குப் பலி; ‘ஸ்மார்ட்’ அரசாங்கத்தின் இலட்சணம் இதுவா?

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
38 பார்வைகள்

டிஜிட்டல் நாட்டை உருவாக்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த ‘திசைகாட்டி’ அரசு, நாட்டின் 2.5 மில்லியன் டொலர் வரிப்பணத்தை ஹேக்கர்களுக்குப் பூஜை செய்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையாகச் சாடினார்.

விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவுக்குச் செலுத்த வேண்டிய கடன்தொகை ஹேக்கர்களால் சுருட்டப்பட்ட விவகாரம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள மர்மங்கள் குறித்துப் பல்வேறு கேள்விகளை அவர் எழுப்பினார்.

“மக்களின் வரிப்பணமான 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட சம்பவம் கடந்த ஜனவரி மாதமே நடந்துள்ளது. இதற்காக மார்ச் மாதம் ஒரு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது. அவ்வாறிருக்கையில், நேற்றுமுன்தினம் பொதுவெளியில் இந்தத் தகவல் கசியும் வரை, அரசும் நிதி அமைச்சும் இதனை இரகசியமாக வைத்திருந்தது ஏன்? நாட்டின் நிதி அதிகாரம் கொண்ட நாடாளுமன்றத்துக்கு இதனைத் தெரிவிக்காதது ஏன்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகம் மற்றும் வெளிநாட்டு மூலவளத் திணைக்களம் ஆகியவற்றுக்குக் கடன் செலுத்தும் பொறுப்பு வழங்கப்பட்ட பின்னர், முறையான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“வங்கிப் பரிவர்த்தனைகளின் போது பின்பற்றப்பட வேண்டிய மின்னஞ்சல் உறுதிப்படுத்தல் மற்றும் ‘வைட் லிஸ்டட்’ நடைமுறைகளை நிதி அமைச்சு ஏன் பின்பற்றவில்லை? இது தொடர்பாக மத்திய வங்கி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தும், பாதுகாப்பு நடைமுறைகள் அலட்சியம் செய்யப்பட்டுள்ளன” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தற்போது அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பக் குழுவின் நம்பகத்தன்மை குறித்தும் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.

“குற்றம் சாட்டப்பட்ட அதே நிறுவனத்தின் ஊழியர்களைக் கொண்டே விசாரணைகளை நடத்துவது எந்த வகையில் நியாயம்? பொதுநலவாய விருதைப் பெற்ற ஒரு நிறுவனம், இவ்வளவு பெரிய தொகையை ஹேக்கர் ஒருவரின் கணக்குக்கு மாற்றியது வியப்பளிக்கின்றது. எனவே, இது குறித்து வெளிப்படையான, நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

“நடமாடும் நூலகங்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்களால், ஒரு ஹேக்கரிடமிருந்து நாட்டின் நிதியைப் பாதுகாக்க முடியவில்லை. அரசின் இந்தத் திறமையின்மையால் ஏற்பட்ட 25 இலட்சம் டொலர் இழப்பை, மீண்டும் மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு ஈடுகட்ட முயற்சிக்க வேண்டாம்” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எச்சரித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

53 0 0