உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதில் கல்முனை மாநகரசபை மந்தநிலை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
33 பார்வைகள்

கல்முனை பொதுச் சந்தையில் இருந்து கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதில் கல்முனை மாநகர சபை மந்த நிலையில் உள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பொதுப் போக்குவரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கட்டாக்காலி மாடுகளினால் அன்றாடம் வீதி விபத்துகள் ஏற்படுதல் மற்றும் பொதுச் சொத்துக்கள் சேதமாக்கப்படுத்தல் என்பன தினமும் கல்முனை மாநகர பொதுச்சந்தையில் இடம்பெறுகின்றன.

இதற்கமைய கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் கட்டாக்காலியாக அலைய விடப்பட்ட மாடுகளை அதன் சொந்தக்காரர்கள் வீடுகளில் அல்லது பண்ணைகளில் கட்டி வைத்து பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவித்தல் ஒன்றினை ஏலவே விடுத்திருந்தும் பயனற்றதாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டினை முன்வைக்கின்றனர்.

ஆனால் அண்மையில் கல்முனை மாநகர சபையினால் கட்டாக்காலி கால்நடைகள் பிடிக்கப்பட்டு மாநகர – பிரதேச சபை சட்டத்தின் கீழ் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதன்போது கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளருக்கு பல தடவைகள் அறிவுறுத்தியும் கவனத்தில் கொள்ளாமையினால் அம்மாட்டு உரிமையாளர்கள் தண்டப்பணம் செலுத்தி தங்களது மாடுகளை அழைத்துச் சென்றிருந்தனர்.

இருந்த போதிலும் தற்போது அதிகளவான கட்டாக்காலி மாடுகள் தினமும் இச்சந்தைக்கு வருகை தந்து பொதுமக்களுக்கு பல்வேறு அசௌகரிங்களை மேற்கொண்டு வருகின்றன.

எனவே கல்முனை மாநகர பொதுச்சந்தையில் காலை, மாலை வேளைகளில் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்கு கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

53 0 0