உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அயல் வீட்டுப் பெண் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்த இளைஞன் கைது.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
37 பார்வைகள்

கொழும்பு 07 பகுதியில் அயல் வீட்டுப் பெண் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்து, அதனை அவரது நண்பிக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞனை மே மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் அஸங்க எஸ். போதரகம வியாழக்கிழமை (23) உத்தரவிட்டுள்ளார்.

மருதமுனைப் பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், கொழும்பு 07 இல் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவருக்கு அருகிலுள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வரும் இளம் பெண் ஒருவர் குளிப்பதைத் தனது கையடக்கத் தொலைபேசி மூலம் இரகசியமாக காணொளி எடுத்துள்ளார்.

அந்த காணொளியை பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பி ஒருவருக்கும் சந்தேகநபர் அனுப்பியுள்ளார்.

நண்பி அளித்த தகவலின் பேரில் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாகச் சந்தேக நபரின் வீட்டிற்குச் சென்று அவரைச் சத்தமிட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர், சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியைப் பறித்து அங்கேயே அடித்து உடைத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனை அடுத்து பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றத்தில் பொலிஸார் சமர்ப்பித்த தகவல்களைப் பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை மே 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

53 0 0