உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

‘ஐரிஸ் டேனா’ மீதான தாக்குதல் ஒரு போர்க்குற்றம்; அமெரிக்காவே பொறுப்பு என்று இலங்கையிடம் ஈரான் கடும் சாடல்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
32 பார்வைகள்

இலங்கைக் கடற்பரப்புக்கு அப்பால் ‘ஐரிஸ் டேனா’ (கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்காவே பொறுப்பு என ஈரான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.

ஈரானின் வெளிவிவகார அமைச்சர் செய்யித் அப்பாஸ் அராக்சி மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில் நேற்று இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலை “முன்னெப்போதும் இல்லாத போர்க்குற்றம்” என வர்ணித்த அமைச்சர் அராக்சி, இது ஜெனிவா உடன்படிக்கை உள்ளிட்ட சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை அப்பட்டமாக மீறும் செயல் என்றும் கடுமையாகச் சாடினார்.

இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து, சட்டத்தின் முன் நிறுத்த தேவையான அனைத்து சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளையும் ஈரான் முன்னெடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

தாக்குதலுக்குள்ளான கப்பலில் இருந்தவர்களை மீட்பதற்கும், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீண்டும் ஈரானுக்கு அனுப்பி வைப்பதற்கும் இலங்கை அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கைகளுக்கு ஈரான் வெளிவிவகார அமைச்சர் இதன்போது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

மேற்காசியாவில் அதிகரித்து வரும் பதற்ற நிலை குறித்துக் கவலை வெளியிட்ட அவர், இந்தத் தாக்குதல் சம்பவம் ஈரானிய மக்களின் நினைவில் நீங்காத வடுவாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த இக்கட்டான சூழலிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு அமைச்சர்களும் ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

53 0 0