உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சுகாதார சீர்கேட்டுடன் வெதுப்பக உற்பத்தி பொருட்களை ஏற்றிச் சென்றவர்களுக்கு தண்டப்பணம் விதிப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
38 பார்வைகள்

யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் வெதுப்பக உற்பத்தி பொருட்களை விற்பனைக்காக வாகனங்களில் ஏற்றி சென்றவர்களுக்கு 80 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பகுதிகளில் வெதுப்ப உற்பத்தி பொருட்களை விற்பனைக்காக ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது, உரிய முறையில் வாகனத்தை பேணத் தவறியமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, மருத்துவ சான்றிதழ் கொண்டிராமை போன்ற செயற்படுகளுக்கு எதிராக நான்கு உரிமையாளர்களுக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

குறித்த வழக்கு நேற்றையதினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது உரிமையாளர்கள் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவர்களை கடுமையாக எச்சரித்த மன்று தலா 20ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

53 0 0