உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
27 பார்வைகள்

தொன்று தொட்டு மரப்புகளைப்பேணிப் பாதுகாப்பதை தமிழினம் இன்றும் கைக்கொண்டு வருகின்றது.
என்பதைப் பறைசாற்றும் முகமாக சித்திரை வருடப்பிறப்பின் பின்னர் போர் தேங்காய் அடிக்கும் பாராம்பரிய நிகழ்வு பன்நெடுங் காலமாக மட்டக்களப்பு மாவட்டம் கோட்டைக்கல்லாறு கிராமத்தில் இருந்து வருகின்றது.

அதற்கிணங்க இவ்வருடமும் சித்திரை வருடப்பிறப்பின் பின்னர் கோட்டைக் கல்லாறு கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டிருந்த போர்த்தேங்காய் அடிக்கும் நிகழ்வு நேற்று 22 ஆம் திகதி மாலையுடன் நிறைவு பெற்றிருந்தது.

இப்போர்தேங்காய் அடிக்கும் நிகழ்வு தங்களுடைய மூதாதையர் காலத்திலிருந்து தொன்று தொட்டு இற்றைவரையில் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு மிக நீண்ட வரலாறும் உண்டு எனவும் அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

வடசேரி, தென் சேரி என இரு பிரிவுககளாக பிரித்து, முதலாவதாக தென்சேரியைச் சேர்ந்த நபர் வடசேரிப்பக்கமாக தேங்iகாய் ஒன்றை வீசுவார் அப்போது வடசேரியைச் சேர்ந்தவர் அவரது கையில் வைத்திருக்கும் தேங்காயால் வீசி வருகின்ற தேங்காய்க்கு அடிப்பார்.

அதில் இரண்டு தேங்காய்களும், உடைந்துவிடும், அல்லது ஏதாவது ஒன்று மாத்திரம் உடையும், அல்லது இரண்டும் உடைபடாமலும் போகும். இவ்வாறு மாற்றி மாறி தேங்காய்கள் வீசப்படும். இறுதியில் எந்தச் சேரிப்பக்கம் தேங்கய்கள் மீதமுள்ளதோ அப்பக்கமே வெற்றி பெற்றதாகக் கருதப்படும்.

சுமார் ஒரு வாரகாலமக இது கோட்டைக்கல்லாது கண்ணகையம்மன் ஆலய முன்றலில் மாலை 5 மணிமுதல் நடைபெறும். இறுதியில் தென்சேரி வாரத்திற்கு அதவது கண்ணகி அம்மன் பக்கம் வெற்றி பெற்றதும் வருடத்திற்கான தேங்காய் அடிக்கும் நிகழ்வு முடிவுறுத்தப்படும். இதுவே இற்றை வரையில் வழக்கமாக அந்த மக்கள் கடைப்பிடித்து வருகின்றார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

68 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

52 0 0