உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சிறப்பாக நிறைவுற்ற கபில்வத்தை முருகன் ஆலய புனித யாத்திரை!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
28 பார்வைகள்

மொனராகலை மாவட்டத்தின் பெருங்காட்டுப் பகுதியில் அமைந்துள்ள, புனித கபில்வத்தை முருகன் ஆலயத்தின் வருடாந்த யாத்திரை, கடந்த 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை பக்தி பரவசத்துடன் ஆரம்பமாகி, 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பாக நிறைவுற்றது.

குமுக்கன் ஆற்றங்கரையருகில் இயற்கை வளமுடன் அமைந்துள்ள இந்தத் தலம், ‘கற்பக விருட்சம்’ என பக்தர்கள் போற்றும் புனித புளியமரத்திற்காகவும் பிரசித்தி பெற்றது. இத்தலம் முருகப்பெருமான் தவம் செய்த இடமாகவும், ரிஷிகள் மற்றும் முனிவர்கள் தங்கிய புனித நிலமாகவும்,  இதிகாசபுராண வரலாறுகளுடன் தொடர்புடையதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.

இவ்வாண்டு யாத்திரை , சித்தர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது. உலக நன்மை வேண்டி யாகங்கள், சித்த யாகம், நாத ஒலி வழிபாடு, சத்ரு சங்கார யாகம், வேல் பூஜை மற்றும் கபில வன பூஜை உள்ளிட்ட ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த யாத்திரையில் கலந்து கொண்ட பக்தர்கள் 21 நாட்கள் விரதமிருந்து ஆன்மீக பயணத்தில் ஈடுபட்டனர். மேலும், தமிழ் மற்றும் சிங்கள மக்களின் ஒருங்கிணைந்த பங்கேற்பு இவ்விழாவை இன ஒற்றுமையின் சிறந்த எடுத்துக்காட்டாக மாற்றியது.

நாட்டின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து வழிபாடுகளில் ஈடுபட்டனர். இப்புனித யாத்திரை பக்தி, சமாதானம் மற்றும் இன நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் முக்கிய ஆன்மீக நிகழ்வாக திகழ்கிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

68 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

52 0 0