கனமழையால் பாடசாலை மாணவர்கள் அவதி.!
மதிய வேளை தொடக்கம் பெய்து வரும் கனமழை காரணமாக பாடசாலை மாணவர்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
பொகவந்தலாவ நகரில் இருந்து சென்மேரிஸ் கல்லூரிக்கு செல்லும் பிரதான சாலையில் இருந்து வரும் மழை நீர் மற்றும் கழிவு நீர் கால்வாய் வழியாக செல்லாமல் சாலை வழியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் உடன் கவனம் செலுத்தி தீர்வினை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் பாடசாலை மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

