உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சட்டவிரோதமாக ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்த மூவர் கைது.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
39 பார்வைகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் நேற்று(22) இரவு கடற்படையால் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது சட்டவிரோதமாக ஒளிப்பாய்ச்சி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று நபர்கள் மூன்று படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் பலர் ஈடுபட்டு வருவதாக சிறு மீனவர்களால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக காங்கேசன்துறையில் இருந்து மிக ரகசியமாக வரவழைக்கப்பட்ட கடற்படையின் அதிவிரைவு ரோந்து படகுகள் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியை திடீர் சுற்றிவளைப்பு செய்தன.

இதன்போது சட்டவிரோதமாக ஒளிப்பாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூன்று நபர்கள் மூன்று படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் வெற்றிலைக்கேணி கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

68 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

52 0 0