உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் வித்தியாலயத்தில் பற்சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
31 பார்வைகள்

பாடசாலை மாணவர்களின் பல் மற்றும் வாய் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட பாடசாலை பற்சிகிச்சை நிலையம் நேற்று (22) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் திருமதி எம்.சீ.நஸ்லின் றிப்கா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, நிலையத்தினை நாடா வெட்டித் திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், பிராந்திய வாய் சுகாதாரப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஹபீப் முஹம்மட், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஜே.மதன், உயிரியல் மருத்துவ பொறியியலாளர் என்.எம்.இப்ஹாம், கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஏ.ஏ.மலீக் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இதேவேளை இந்த நிகழ்வின் போது மேற்பார்வை பாடசாலை பற்சிகிச்சையாளர் ஜே.ஜனலோஜினி உட்பட பாடசாலை பற்சிகிச்சையாளர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

குறித்த நிலையத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களின் பல் சுகாதாரத்தினை மேம்படுத்துவதற்கான சகல செயற்பாடுகளும் பாடசாலை பல் சிகிச்சையாளரால் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை பிராந்தியத்தில் மாணவர்களின் சுகாதார நலனை உறுதிப்படுத்தும் இத்திட்டம், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

68 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

52 0 0