மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு.!
எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று புதன்கிழமை (22) இரவு உந்துருளி மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.
உயிரிழந்தவர் பல்லேகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உந்துருளி பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென அதன் மீது மரம் முறிந்து விழுந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் உந்துருளியை செலுத்திய நபரும் பின்னால் அமர்ந்து பயணித்த பெண்ணும் காயமடைந்த நிலையில் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உந்துருளி ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த பெண் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலதிக விசாரணைகளை எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.