உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மே தினத்துக்கு முன் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் மாற்றங்கள்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
31 பார்வைகள்

மே தினத்திற்கு முன்னதாக மக்கள் ஆதரவைப் பெறும் நோக்கில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் மாற்றங்களை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

மே 1 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி, தற்போதைய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தைக் கலைத்துவிட்டு, ஒரு மக்கள் முடிவாக புதிய வாரியத்தை நியமிக்கக்கூடும் என்று அறிக்கைகள் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்த ஆண்டு ஐக்கிய மக்கள் சக்தி மிகப்பெரிய பேரணியை நடத்தும். அதேநாளில் பௌர்ணமி பண்டிகை வருவதால் ஐக்கிய மக்கள் சக்தி, தனது மே தின நடவடிக்கைகளை ஒரு பேரணியுடன் மட்டுப்படுத்திக் கொள்ளும் என்றும், அணிவகுப்புகள் அல்லது பிற கொண்டாட்டங்களை நடத்தாது என்றும் மரிக்கர் கூறினார்.

புதிய இடைக்கால கிரிக்கெட் நிர்வாகத்தில் முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. எரன் விக்ரமரத்னவுக்குப் பதவி வழங்கப்படலாம் என்ற செய்திகள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த மரிக்கர், தாம் அந்த ஊடகச் செய்திகளைப் பார்த்ததாகவும், ஆனால் தமக்கு அது தொடர்பில் உறுதியான தகவல் எதுவும் இல்லை என்றும் கூறினார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும், உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் பல உள்ளூர் ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

67 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

52 0 0