உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

குறிகாட்டுவான் இறங்குதுறையினை புனரமைப்பு செய்வதற்கான இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்பம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
36 பார்வைகள்

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் குறிகாட்டுவான் இறங்குதுறையினை புனரமைப்பு செய்வதற்கான இரண்டாம் கட்ட வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்தாயக்கவினால் குறித்த திட்டத்திற்கான பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது.குறித்த திட்டமானது 984.03 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் நிலையில் எதிர்வரும் ஒக்ரோபர் 27 ஆம் திகதி இதன் வங்கிகள் யாவும் நிறைவடையவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்போது உரையாற்றிய ஆளுநர்,குறிகாட்டுவான் அபிவிருத்தி தொடர்பாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சருக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். இது முக்கியமான திட்டம் வெளிநாட்டு பணமல்ல இது அரசாங்கத்தின் பணமாகும் தீவகத்தின் அபிவிருத்தியில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றது.

இந்த அரசாங்கத்தின் காலத்திலே அனைத்து அபிவுருத்திகளையும் மேற்கொள்ள முடியும். என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் குறிப்பிட்டார்.நிகழ்வில் உரையாற்றயஅமைச்சர் பிமல் ரத்நாயக்கா இவ்வாறு கூறினார்.

தீவுப்பகுதியில் பெற்றோல் செற் ஒன்றினை அமைப்பதற்காக முயற்சி ஒன்றினை மேற்கொண்டு வருகிறோம்.இறங்குதுறையின் பணிகள் நிறைவடைந்ததும் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு வேறு அரசு யாழ்ப்பாணம் வேறு அரசாங்கம் அல்ல அதே அரசாங்கம் தான் இங்கும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டும். 

அரச உத்தியோகத்தர்கள் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பணியாற்ற வேண்டும். அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் நாம் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். வடக்கு மாகாணம் முழுவதும் வீதிகளைப்புனரமைப்புக்கு 2000 கோடி வரையில் ஒதுக்கப்பட்டுள்ளது.வடக்கு மாகாண அபிவிருத்திகள் அனைத்தும் இழுத்தடிக்கப்பட்ட நிலையில் காணப்படும் நிலையில் அதனை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

வடக்கு, கிழக்கு என்ற பாகுபாடின்றி அனைதது இனத்தவரும் வருகைதரும் இவ்விடத்தினை புனரமைப்பு செய்தல் அவசியமாகிறது. கடந்த அரசாங்கம் சிங்கள மக்களுக்கு மாத்திரம் சேவை செய்வதாக காணப்பட்டது. அத்துடன் சிங்கள மக்களுக்கு மாத்திரம் சேவை செய்வதாக காணப்பட்டது. ஆனால் தேசிய மக்கள் சக்தியானது பின்தங்கிய அனைத்து பிரதேச மக்களுக்கும் ஒரு மாதிரியாக வேலை செய்யும் அரசாங்கமாக காணப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அபிவிருத்தப்பணிகள் தொடர்பிலும் பார்வையிட்டனர்.நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கா, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.ரஜீவன் மற்றும் வட பிராந்திய கடற்படை கட்டளைத்தளபதி, நெடுந்தீவு, வேலனை பிரதேச செயலர்கள், பிரதேசசபை தவிசாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0