உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அம்பாள்புரம் தமிழ் வித்தியாலயத்திற்கு ரவிகரன் எம்.பி நிதி ஒதுக்கீடு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
30 பார்வைகள்

முல்லைத்தீவு – துணுக்காய் வலயக் கல்விப் பணிமனையின் கீழுள்ள அம்பாள்புரம் தமிழ் வித்தியாலயத்திற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது 2026ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 200,000 ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளார்.

பாடசாலைச் சமூகத்தின் கோரிக்கைக்கு அமைவாக, அம்பாள்புரம் தமிழ் வித்தியாலய கட்டடத்திற்கு தீந்தை பூசுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 20.04.2026 அன்று குறித்த பாடசாலைக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் பாடசாலையில் காணப்படும் வளப்பற்றாக்குறைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

அந்தவகையில் அம்பாள்புரம் தமிழ் வித்தியாலயத்திலுள்ள 30 வருடங்கள் பழமை வாய்ந்த கட்டடங்கள் மங்கிய நிலையிலும், பாதிப்படைந்தும் காணப்பட்டு வந்த நிலையில், தமது கோரிக்கைக்கு அமைவாக அக்கட்டடங்களுக்கு தீந்தை பூசுவதற்காக நிதி ஒதுக்கீடு மேற்கொண்டமைக்கு பாடசாலை முதல்வரால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு 47 மாணவர்கள் கல்விகற்கும் குறித்த பாடசாலைக்கு பொது ஆங்கில பாடத்திற்கான ஆசிரிய ஆளணி உள்ளடங்கலாக மொத்தம் ஆறு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆசிரிய ஆளணிகள் காணப்படுகின்றன. இருப்பினும் குறித்த பாடசாலையில் நான்கு ஆசிரியர்களே பணியாற்றி வருவதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதுதவிர சிறார்களுக்கான நேர்த்தியான விளையாட்டு முற்றமொன்றினை அமைத்துத்தருமாறும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

மேலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பாடசாலையில் காணப்படும் வளப்பற்றாக்குறைகள் தொடர்பாக நேரடியாகப் பார்வையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0