உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மத்திய முகாம் வைத்தியசாலையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட மகப்பேற்று விடுதி கையளிப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
37 பார்வைகள்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலில், CIC விவசாய வர்த்தக நிறுவனத்தின் சமூக நலத் திட்டத்தினூடாக திருத்தி அமைக்கப்பட்ட மத்திய முகாம் பிரதேச வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி, நேற்று செவ்வாய்க்கிழமை (21) உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

மத்திய முகாம் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் இசுறு கொடிக்கார தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் மற்றும் CIC வர்த்தக நிறுவன பணிப்பாளர் வரூண மதவன ஆராச்சி ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டு விடுதியினைத் திறந்து வைத்தனர்.

மிக நீண்டகாலமாக சேதமடைந்து, கைவிடப்பட்ட நிலையில் இருந்த இந்தப் பழமையான விடுதிக் கட்டிடம், CIC நிறுவனத்தின் நிதியுதவியுடன் சிவில் பாதுகாப்பு திணைக்களம், பாதுகாப்புத் துறையினர், அரச நிறுவனங்கள், வைத்தியசாலை அபிவிருத்தி குழு, வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பினரினதும் முழுமையான ஒத்துழைப்புடன் திருத்தியமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள், நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி.ராகுலநாயகி சஜிந்ரன், கல்முனை பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், பாதுகாப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள், நலன்விரும்பிகள் எனப் பெருந்திரளானோர் குறித்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

அம்பாறை மத்திய முகாம் என்பது மூன்று இன மக்களும் வாழும் ஒரு கிராமம். பிரதேசத்தின் நீண்டகாலத் தேவையாக இருந்த இந்த மகப்பேற்று விடுதி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளமை, இப்பகுதி கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாகத் அப்பிரதேச மக்கள் 8தெரிவிக்கின்றனர். அதற்காக உழைத்த சகல தரப்பினருக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0