உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மன்னார் நகர சபை தவிசாளர், முன்னாள் தவிசாளர் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
36 பார்வைகள்

மன்னார் நகர சபை தவிசாளர் டானியல் வசந்தன், முன்னாள் தவிசாளர் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் (CID) கடந்த திங்கள் மற்றும் நேற்று செவ்வாய் ஆகிய இரு தினங்கள் மீண்டு அழைக்கப்பட்ட நிலையில் அங்கு சென்று சாட்சியமளித்துள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அழைப்பிற்கு அமைய குறித்த இரு தினங்களும் காலை 9.30 மணியளவில் குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையான மன்னார் நகர சபையின் தவிசாளர் மாலை 5 மணி வரை வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து கொழும்பில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (21) அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த இரண்டு நாட்களாக கொழும்பு குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் (CID) முன்னாள் தவிசாளர் உட்பட முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சைனா பஜார் கடைகளை ஒதுக்கியதில் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில், அது தொடர்பான அனைத்து ஆவணங்களும் நகலெடுக்கப்பட்டு, அதில் தவிசாளரின் கையொப்பம் மற்றும் திகதி பெறப்பட்டுள்ளது.

நிதி குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த விவகாரத்தை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளனர். எனவே, அடுத்த வாரங்களில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் இது குறித்த நேரடி விசாரணைகளைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விசாரணையின் அடுத்தகட்டமாக நகர சபை செயலாளர் மற்றும் கணக்காளர் ஆகியோர் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட உள்ளனர்.

முழுமையான விசாரணைகளுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்யவும், அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தரவும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மன்னார் மக்களின் வரிப்பணம் முறைகேடு செய்யப்படுவதைத் தடுத்து, அந்தப் பணத்தை மீண்டும் மக்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவதே இந்த விசாரணையின் முக்கிய நோக்கம்.

தற்போதைய அரசாங்கம் ஊழல் வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதால், இந்த விசாரணை சரியான பாதையில் சென்று நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0