உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மாரடைப்பு காரணமாக பெண் ஒருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
51 பார்வைகள்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பாலத்தடிச்சேனை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) 75 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் மாலை நேரத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது, குறித்த பெண் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, குடும்பத்தினர் மூதூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

பின்னர், மூதூர் நீதிபதியின் உத்தரவின்படி திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் பொலிஸ் நிலையப் பொது பதிவாளர் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணைகளின் அடிப்படையில், அதிக வெப்பநிலை காரணமாக வெயிலில் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும், இதற்கு முன்பும் அவருக்கு ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0