விபத்தில் சிக்கி முதியவர் உயிரிழப்பு.!
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் நேற்று இரவு 7.00 மணியளவில் பரந்தன் சந்திக்கு அண்மையில் வீதியை குறுக்காக கடக்க முற்பட்ட முதியவர் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 55 வயதான புன்னைநீராவி கண்ணகைபுரத்தை சேர்ந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.