உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து கல்முனையில் அஞ்சலி..!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
32 பார்வைகள்

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 200ற்கும் மேற்பட்ட உயிர்களை பலிக் கொண்ட உயிர்த்த ஞாயிறு  தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.

இதனை முன்னிட்டு குறித்த   உயிர்த்த  ஞாயிறு குண்டு வெடிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கான அஞ்சலி நினைவு   நிகழ்வு இன்று 21 ஆம் திகதி மாலை  கல்முனை பகுதியில் இடம்பெற்றது.

மேலும் குறித்த  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவேந்தல் நிகழ்வு   07ஆண்டுகள் நிறைவினையொட்டி  பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றன.இதன் போது ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது  உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குள்ளான சீயோன் தேவாலய தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் நினைவு கூரப்பட்டு  மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டது.இங்கு  இராணுவத்தினர் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள் (Sri Lanka Easter bombings) 2019 ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு அன்று இலங்கையின்  தலைநகர் கொழும்பு உட்பட மூன்று நகரங்களில் இடம்பெற்றன. மூன்று கிறிஸ்தவக் தேவாலயங்களிலும், மூன்று ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளிலும் இத்தொடர் குண்டுவெடிப்புகள் காலை 08:30 இற்கும் 09:15 மணிக்குமிடையில் நிகழ்ந்தன. 39 வெளிநாட்டவர்கள் உட்பட 250 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கொழும்பு கொச்சிக்கடை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் உயிர்ப்பு ஞாயிறு திருப்பலி நிகழ்வுகள் நடைபெற்ற போது குண்டுகள் வெடித்தன. ஏனைய குண்டுகள் கொழும்பின் நடுப்பகுதியில் அமைந்திருந்த சங்கிரி-லா உணவகம், சினமன் கிராண்ட் உணவகம், கிங்சுபரி உணவகம் ஆகிய மூன்று ஐந்து-நட்சத்திர உணவுவிடுதிகளில் வெடித்தன. இத்தாக்குதல்கள் தொடர்பாக பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் பலரும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். 

இத்தாக்குதல் நடைபெற்று சில தினங்களின் பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் ஒழிந்திருந்த தீவிரவாத குழுவை பற்றிய தகவல்களை அப்பிரதேச மக்கள் பாதுகாப்பு படைக்கு வழங்கி நாட்டில் மற்றுமொரு தீவிரிவாத செயல் நடைபெறாமல் தடுத்திருந்தனர். அப்போது இலங்கை பாதுகாப்பு படைக்கும் தீவிரவாத கும்பலுக்கும் இடையில் நடைபெற்ற சண்டையில் சாய்ந்தமருதை சேர்ந்த அப்பாவி இளம் பெண்ணொருவரும் பலியாகியிருந்தமை குறிப்பிடதக்கது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0