உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி வேண்டிப் பிரார்த்தனை யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக நடந்த 7ஆம் ஆண்டு நினைவேந்தல்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
36 பார்வைகள்

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றன.

யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணத்தின் ஒழுங்குபடுத்தலில், யாழ்ப்பாணம் மரியன்னை பேராலய வளாகத்தில் உள்ள ஆயர் இல்ல சிற்றாலய முன்றலில் இந்த நினைவேந்தல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காகப் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த இடத்தில் சுடரேற்றப்பட்டு, உயிரிழந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

நிகழ்வின் போது யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட்டால் அஞ்சலி உரை வழங்கப்பட்டது. அத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரினைப் பகிர்ந்து கொண்ட அவர், நீதிக்கான பிரார்த்தனைகளின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் இறைமக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று இவ்வாறான நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0