இன்றும் கன மழை நாவலப்பிட்டி நகரில்.
இன்று 21 ஆம் திகதி மதியம் கன மழை காரணமாக நாவலப்பிட்டி நகரில் பேருந்து நிலைய பகுதியில் மற்றும் நாவலப்பிட்டி கண்டி வீதியில் சுமார் ஒரு அடிக்கு மேல் மழை நீர் மற்றும் கழிவு நீர் தேங்கி நிற்கும் காட்சிகள் காணக்கூடியதாக இருந்தது.
இதன் காரணமாக பேருந்து நிலையம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு உட்பகுதியில் மழைநீர் புகுந்தது உள்ளது.
பேருந்து நிலைய பகுதியில் இருந்த பயணிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்க பட்டு உள்ளனர்.
தொடர்ச்சியாக நாவலப்பிட்டி நகரில் மழை அதிகமாக பெய்யும் வேளைகளில் இவ்வளவு மழை நீர் தேங்கி நிற்கும் அபாயம் உள்ளது.
அதன் காரணமாக நாவலப்பிட்டி நகரில் உள்ள அனைத்து வடிகால்களையு முறையாக ஆலப்படுத்தி அந்த கழிவு நீரை மகாவெலி கங்கை பகுதியில் கொண்டு செல்ல வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.