உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளின் செம்மணிக்கான வருகை ஒத்திவைப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
42 பார்வைகள்

செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை இன்று செவ்வாய்க்கிழமை பார்வையிடவிருந்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள், தமது விஜயத்தை அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் திகதி வரை ஒத்திவைத்துள்ளனர்.

செம்மணி புதைகுழிப் பகுதியை நேரில் பார்வையிட ஐரோப்பிய ஒன்றியக் குழுவினருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது. எனினும், தற்போது களத்தில் அகழ்வுப் பணிகள் நடைபெறாத காரணத்தால், இன்று அவர்கள் வருகை தரவில்லை.

இது தொடர்பாகப் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளான வி.எஸ். நிரஞ்சன் மற்றும் ரனித்தா ஞானராஜா ஆகியோர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
“செம்மணிப் புதைகுழியில் தற்போது அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதியை மட்டும் பார்வையிட ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் விரும்பவில்லை. அகழ்வுப் பணிகள் நேரடியாக இடம்பெறும்போது நேரில் வருகை தந்து பார்வையிடுவதே பொருத்தமாக இருக்கும் என அவர்கள் கருதுகின்றனர்.

எதிர்வரும் 27ஆம் திகதி மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அதன் பின்னரே ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவர்கள் வருகை தரும் உத்தியோகபூர்வ திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சட்டத்தரணிகள் மேலும் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தின் அனுமதி இப்போதும் அமுலில் உள்ள நிலையில், அகழ்வுப் பணிகளின் ஆரம்பத்துடன் சர்வதேசக் குழுவின் இந்த விஜயம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0