உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

விபத்தில் உயிரிழந்த குழந்தையின் சடலம் மீண்டும் தோண்டி எடுப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
39 பார்வைகள்

மன்னார் தாராபுரம் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள துருக்கி சிற்றி பகுதியில் விபத்தின் போது உயிரிழந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்ட ஒரு வயது ஏழு மாதம் ஆன குழந்தை ஒன்றின் சடலம் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கு அமைவாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (21) மன்னார் தாராபுரம் மையவாடியில் அகழ்ந்து எடுக்கப்பட்டது.

துருக்கி சிற்றி பகுதியில் கடந்த 18ஆம் திகதி மாலை பாண் விற்பனை செய்வதற்காக சென்ற மின் களத்தில் இயங்கும் முச்சக்கர வண்டி துருக்கி சிட்டி பகுதியில் பாண் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் வீட்டு வளவில் இருந்து வெளியே வந்த குறித்த குழந்தை முச்சக்கர வண்டியில் அடிபட்டதாக கூறப்பட்ட நிலையில் குறித்த குழந்தையை உடனடியாக மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

எனினும் குறித்த குழந்தை இறந்து காணப்பட்ட நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் சடலம் குறித்து மேலதிக நடவடிக்கையின் பின்னர் குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு கடந்த 19ஆம் திகதி தாராபுரம் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.

குறித்த சடலம் தொடர்பில் மன்னார் பொலிஸ் தரப்பினர் முறையான விசாரணைகளை முன்னெடுக்காமல் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நல்லடக்கம் நடந்துள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் முறைப்பாட்டிற்கு அமைவாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் விசாரணை முன்னெடுத்த நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை (21) விசாரணைகளுக்காக குறித்த சிறுமியின் சடலத்தை தோண்டி எடுக்க உத்தரவு வழங்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நீதவான் முன்னிலையில் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.

குறித்த அகழ்வு பணியின் போது மன்னார் பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகள் உள்ளடங்களாக பொலிஸார் மற்றும் அனைத்து தரப்பினரும் குறித்த மையவாடி பகுதியில் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0