உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

எரிபொருள் விநியோகம்; கியூ.ஆர் குறியீட்டு முறைமை தொடர்பில் வெளியான அறிவிப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
34 பார்வைகள்

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலையேற்றம் மற்றும் விநியோகத் தடைகளுக்கு மத்தியில், நாட்டில் எரிபொருளை முறைப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட கியூ.ஆர் குறியீடு முறைமை காலவரையறையின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையை அடுத்து, எரிபொருள் சிக்கன நடவடிக்கையாக அரசாங்கம் மீண்டும் கியூ.ஆர் குறியீடு முறையை நடைமுறைப்படுத்தியது.

குறிப்பாக, உலக எரிபொருள் போக்குவரத்தில் 20 சதவீத பங்களிப்பை வழங்கும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலையினால், உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு விலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இது குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவிக்கையில்,
உலகளாவிய எரிபொருள் நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே, தற்போதைய கியூ.ஆர் குறியீடு முறைமையின் கீழேயே சில்லறை எரிபொருள் விநியோகம் தொடரும். எவ்வாறாயினும், தேவைக்கேற்ப இந்த முறைமையில் மாற்றங்கள் செய்யப்படும் என்றார்.

எதிர்காலத்தில் கொடுப்பனவு முறைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குதல், வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப வழங்கப்படும் எரிபொருள் அளவை அவ்வப்போது திருத்தம் செய்தல், சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு எரிபொருள் மானியங்களை வழங்குவது குறித்து பரிசீலித்தல் போன்ற திட்டங்கள் அமுல்ப்படுத்தப்படும்.

உலகளாவிய விநியோகத் தடைகள் இருந்தபோதிலும், உள்நாட்டு சந்தையில் தட்டுப்பாடின்றி எரிபொருளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், சாத்தியமான நெருக்கடிகளை எதிர்கொள்ள இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடம் இருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ளவும் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0