மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!
நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள ரொக்வூட் தோட்டத்தில் நேற்று 20 ஆம் திகதி இரவு 7 மணியளவில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரொக்வூட் தோட்டத்தில் மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்த 86 வயதுடைய கந்தன் ஆண்டி என்பவர் 1990 நோயாளர் காவு வண்டி மூலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதித்த போது அவர் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.