உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மக்கள் வங்கி, இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கி:கடந்த வருட அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
36 பார்வைகள்

இலங்கையின் முன்னணி அரச வங்கிகளான மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியன 2025ஆம் ஆண்டில் தமது வரலாற்றில் மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளன. இவ்வங்கிகளின் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கைகள் இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டன.

மக்கள் வங்கி

மக்கள் வங்கியின் தலைவர் பேராசிரியர் நாரத பெர்னாண்டோ அறிக்கையைக் கையளித்த போது, வங்கி வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகூடிய இலாபத்தை 2025இல் ஈட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

* வரிக்கு முந்திய இலாபம்: 64.4 பில்லியன் ரூபா.
* வரிக்குப் பிந்திய இலாபம்: 40 பில்லியன் ரூபா.

இலங்கை வங்கி

இலங்கை வங்கி தனது 87 வருட கால வரலாற்றில் ஈட்டிய மிகப்பெரிய இலாபத்தை இம்முறை பதிவு செய்துள்ளது என்று அதன் தலைவர் காவிந்த டி சொய்சா தெரிவித்தார்.

* வரிக்கு முந்திய இலாபம்: 120.8 பில்லியன் ரூபா.
* அரசுக்குச் செலுத்தப்பட்ட வரி: 77 பில்லியன் ரூபா.

தேசிய சேமிப்பு வங்கி

தேசிய சேமிப்பு வங்கி அனைத்து வரிகளுக்கும் முன்னர் 59 பில்லியன் ரூபா இலாபத்தைப் பெற்றுள்ளது என்று அதன் தலைவர் கலாநிதி ஹர்ஷ கப்ரால் தெரிவித்தார். அத்துடன், இலாபப் பங்காக திறைசேரிக்கு 6 பில்லியன் ரூபாவை வங்கி வழங்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு அமைவாக, உயர் நிதி ஒழுக்கத்துடன் செயற்பட்டதே இந்தச் சாதனைக்குக் காரணம் என்று  வங்கித் தலைவர்கள் தெரிவித்தனர். இந்த வெற்றியில் வங்கி ஊழியர்களின் அர்ப்பணிப்பான ஒத்துழைப்பையும் அவர்கள் இதன்போது நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் வங்கிகளின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

64 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

76 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0