உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பொலிஸாரின் துப்பாக்கியை பறித்துச் செல்ல முற்பட்ட வழக்காளி கைது ..!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
33 பார்வைகள்

மட்டக்களப்பு – ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில்  காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் துப்பாக்கியை  பறித்துச் செல்ல முற்பட்ட வழக்காளி ஒருவர் ஏறாவூர்ப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


இச்சம்பவம் இன்று 20.04.2026 காலை இடம்பெற்றுள்ளது.நீதிமன்ற வாசலில் நின்ற இவர் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் துப்பாக்கியை திடீரென  பறித்துக்கொண்டு ஓடமுற்பட்ட வேளை பொதுமக்களின் உதவியுடன் மடக்கிப்பிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தையடுத்து நீதிமன்ற பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.


கைதுசெய்யப்பட்ட நபர் தற்போது ஏறாவூர்ப் பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த இந்த நபர்  வழக்கு விசாரணை யொன்றிற்காக நீதிமன்றிற்கு வருதந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் அண்மையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றில் சந்தேக நபராகக் கைதுசெய்யப்பட்டு வாழைச்சேனை நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டவரென தெரியவந்துள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

64 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

76 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0