உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மாகாண சபைத் தெரிவுக் குழுக் கூட்டம் திகதி குறிப்பிடாமல் திடீரென ஒத்திவைப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
34 பார்வைகள்

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஆராய்வதற்காக நாளை 21ஆம் திகதி நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தெரிவுக் குழுக் கூட்டம், திகதி குறிப்பிடப்படாமல் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எல்லை மீள் நிர்ணய ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் முக்கிய ஆவணங்களுடன் அடுத்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் எனக் கடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இவ்வாறானதொரு முக்கியத்துவம் வாய்ந்த சூழலிலேயே இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒத்திவைப்பு குறித்துத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தெரிவுக்குழு உறுப்பினருமான மனோ கணேசன் எம்.பி. தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில்,
“மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக இந்த அரசு எவ்வித அக்கறையுமின்றிச் செயற்படுகின்றது. நாளை நடைபெறவிருந்த தெரிவுக் குழுக் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டிருப்பது, மாகாண சபைகள் தொடர்பாக அரசிடம் நிலவும் அசமந்தப் போக்கின் அப்பட்டமான வெளிப்பாடாகும்” என்று சாடினார்.

மாகாண சபைத் தேர்தல் நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் நிலையில், தெரிவுக் குழுவின் இந்தத் தீர்மானம் அரசியல் வட்டாரங்களில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

64 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

76 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0