பொல்லால் தாக்கி ஒருவர் கொ*லை; 6 சந்தேகநபர்கள் கைது.!
அநுராதபுரம் கவரக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்மில்லவெவ பகுதியில் கடந்த 17ஆம் திகதி மாலை பொல்லால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கவரக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில், ஹல்மில்லவெவ – குருந்தங்குளம் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரு தரப்பினருக்கிடையில் நீண்டகாலமாக நிலவி வந்த பகைமை காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த 6 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் பரிசோதகர் திசாநாயக்க தலைமையில் கவரக்குளம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருகிறது.