உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வீடொன்றுக்கு தீ வைப்பு; மூவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
34 பார்வைகள்

மஹரகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றுக்கு தீவைக்கப்பட்ட சம்பவத்தில் தீக்காயங்களுக்குள்ளான 03 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பமுணுவ, எக்சத் சுபசாதக மாவத்தையிலுள்ள இரண்டு மாடி வீடொன்று நேற்று முன்தினம் (18) மாலை தீப்பற்றி எரிந்துள்ளது.

இது குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும், வீட்டின் மேல் மாடியில் இருந்த தாயும் மகளும் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் அந்த வீட்டின் மேல் மாடியில் வாடகை அடிப்படையில் தற்காலிகமாக வசித்து வந்த 55 வயதுடைய தாயும், அவரது 16 வயதுடைய மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும், உயிரிழந்த பெண்ணின் 46 வயதுடைய கணவர் மற்றும் வீட்டின் கீழ் மாடியில் வசித்து வந்த 76 வயதுடைய வீட்டின் உரிமையாளர் ஆகிய இருவர் பலத்த தீக்காயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பெற்று வந்த 76 வயதுடைய வீட்டின் உரிமையாளரும் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் நடந்த இடத்தில் பெற்றோல் வாசனை வீசியதாகவும், திட்டமிட்ட முறையில் இனந்தெரியாத சந்தேகநபர்களால் வீட்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும், எக்காரணத்திற்காக இந்தத் தீ வைப்பு மற்றும் கொலைகள் இடம்பெற்றன என்பது குறித்த உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

உயிரிழந்த சிறுமியின் தந்தை தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மஹரகம பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

63 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

74 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

28 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0