உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தனுஷ்கோடி – தலைமன்னார் – தனுஷ்கோடி கடல் பகுதியை நீந்தி சாதனை படைத்த சிறுவர்கள்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
29 பார்வைகள்

தமிழகத்தையும், இலங்கையையும் பாக் நீரிணை பிரிக்கிறது. இராமேஸ்வரம் தீவு, அதை தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக் நீரிணையை மன்னார் வளைகுடாவில் இருந்து பிரிக்கின்றன. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும், ஆபத்தான ஜெல்லி மீன்கள் நிறைந்த கடல் பகுதி.

பாக் நீரிணை பகுதியை தனியாகவோ, குழுவாக மற்றும் மாரத்தான் முறையில் பலர் நீந்தி கடந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு அல்லது தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடிக்கு நீந்திக் கடந்தவர்கள்.

ஆனால், ஓர் இடத்திலிருந்து புறப்பட்டு மறுபுறத்தை அடைந்த பின், தொடர்ச்சியாக மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு தொடங்கிய இடத்துக்கே இருபுறமாக நீந்தி வந்தவர்கள் ஒரு சிலர்.

சென்னையை சேர்ந்த சிறுவர்களான ஸ்ரீ அஷ்வத் (11), லவ் (09), குஷ் (09) மற்றும் தன்வேஷ் (10) ஆகிய நான்கு பேரும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் யாதவி விளையாட்டு அகாடமி மற்றும் இந்தியன் ஆட்டிசம் சென்டரில் நீச்சல் பயிற்சி பெற்று பல்வேறு நீச்சல் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.

இவர்கள் ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் நீந்தி சென்று மீண்டும் தனுஷ்கோடிக்கு நீந்தி வருவதற்கு இந்திய வெளியுறவுதுறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகத்திடமும் அனுமதி கோரியிருந்தனர்.

அனுமதி கிடைத்த நிலையில் நேற்றுமுன்தினம் (18) சனிக்கிழமை தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் பிற்பகல் 03.25 மணியளவில் நான்கு சிறுவர்களும் ரிலே முறையில் நீந்த தொடங்கி 17 கடல் மைல் தொலைவை 9 மணி 5 நிமிடங்கள் நீந்தி, இரவு 12.30 மணிக்கு தலைமன்னார் சென்றனர்.

உடனே, அங்கிருந்து தனுஷ்கோடி நோக்கி நீந்தத் தொடங்கி, இன்று காலை 9.27 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல் முனையை வந்தடைந்தனர்.

இந்த சாதனைக்காக சிறுவர்கள் நால்வரும், மொத்தம் 34 கடல் மைல் தொலைவை நீந்தி கடக்க 18 மணி 02 நிமிடங்கள் எடுத்துக் கொண்டனர். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கடலில் அதிக தூரமும், அதிக நேரமும் நீந்த முடியும் என்ற சாதனையை படைத்துள்ளனர்.

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் அஷ்வத், லவ், குஷ், தன்வேஷ் ஆகிய நால்வருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

63 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

74 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

28 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0